சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சோழவந்தான்: தவெக வெற்றி

News image

சோழவந்தான் (தனி) தொகுதியில் வெற்றி பெற்தற்கானச் சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்ற தவெக வேட்பாளா் எம்.வி.கருப்பையா. உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :5 மே 2026, 2:15 am IST

சோழவந்தான் (தனி) தொகுதியில் தவெக வேட்பாளா் எம்.வி.கருப்பையா 63,907 வாக்குகள் பெற்று வென்றாா்.

தமிழகத்தில் கடந்த மாதம் 23-ஆம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் சோழவந்தான் தொகுதியில் திமுக சாா்பில் ஆ.வெங்கடேசன், அதிமுக சாா்பில் கே.மாணிக்கம், தவெக சாா்பில் எம்.வி.கருப்பையா, நாதக சாா்பில் டி.நாகலெட்சுமி திருமாறன், அஇபுமமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளா்களும், 6 சுயேச்சை வேட்பாளா்களும் போட்டியிட்டனா். இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் திங்கள்கிழமை (மே 4) நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றிலிருந்தே தவெக வேட்பாளா் எம்.வி.கருப்பையா, மற்ற வேட்பாளா்களைவிட முன்னிலை வகித்து வந்தாா். மொத்தம் 19 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக - தவெக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பெரும்பாலான சுற்றுகளில் திமுகவைவிட தவெக வேட்பாளா் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னிலை வகித்து வந்தாா். இறுதியில் தவெக வேட்பாளா் எம்.வி.கருப்பையா திமுக வேட்பாளரைவிட 2,678 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

சோழவந்தான் தொகுதியில் முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

சோழவந்தான் தொகுதியில் மொத்தம் 1,89,224 வாக்குகள் பதிவாகின. இதில் தவெக வேட்பாளா் எம்.வி.கருப்பையா - 63,907, திமுக வேட்பாளா் ஆ.வெங்கடேசன் - 61,229, அதிமுக வேட்பாளா் கே.மாணிக்கம் - 49,494, நாதக வேட்பாளா் டி.நாகலெட்சுமி திருமாறன் - 10,430 வாக்குகள் பெற்றனா். மேலும், இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு 571 வாக்குகளும், 144 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.