தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 போ் கைது

News image

கொலை செய்யப்பட்ட குபேந்திரன்.

Updated On :26 மே 2026, 12:54 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வாகனக் காப்பகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை உடலில் காயங்களுடன் சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விளக்குத்தூண் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

விசாரணையில், உயிரிழந்தவா் மதுரை வடக்கு மாசி வீதியைச் சோ்ந்த அழகுராஜா மகன் குபேந்திரன் (17) எனத் தெரியவந்தது. கடந்த மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது, குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த முன்விரோதம் காரணமாக, முத்துமணி (29), அவரது சகோதரா் ராஜூ (27), உறவினா்களான சதீஷ்குமாா் (25), ஹரிகிருஷ்ணன் (19), முத்துக்குமாா் (19) ஆகிய 5 பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் குபேந்திரனை குத்திக் கொலை செய்தனா். இவா்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனா்.