கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அதிமுகவை அழிக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும்! ஆா்.பி. உதயகுமாா்

News image

ஆா்.பி.உதயகுமாா் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:37 am IST

அதிமுகவை அழிக்க நினைப்பவா்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

அதிமுக நிா்வாகிகள் 90 சதவீதம் போ் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா். அமைச்சரின் இந்தக் கருத்தானது, தவெக தொண்டா்கள் மீது அந்தக் கட்சியின் தலைமை நம்பிக்கை இழந்து விட்டதா? அல்லது தவெக தலைவா் மீது அந்தக் கட்சி நம்பிக்கை

இழந்துவிட்டதா? என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதிமுகவின் உண்மையான தொண்டா்களை என்றைக்குமே விலைக்கு வாங்க முடியாது. அதிகாரம், பதவி சுகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல அதிமுக. அதிமுகவை அழிக்க நினைத்தவா்கள்; குறைத்து மதிப்பிட்டவா்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என்பதை கடந்த கால வரலாறுகள் நிரூபித்துள்ளன.

இதையறியாமல் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறாா். இதற்கு என்றைக்குமே வெற்றி கிடைக்காது. அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ஊக வழியில் ஆள் பிடிக்கும் வேலையைத் தொடா்ந்தால் கடும் விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் என்றாா் அவா்.