பொன்விழா ஆண்டு மற்றும் ஸ்வர்ண ஜெயந்தி யாத்திரையை முன்னிட்டு பழனி அடிவாரம் பாதவினாயகர் கோயில் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விஹேச்பி மாவட்ட பொறுப்பாளர் சிவராஜ் குருக்கள் தலைமை வகித்தார். கந்தவிலாஸ் செல்வக்குமார், ஹோட்டல் கண்பத் இயக்குனர் ஹரிஹரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன், வருத்தமில்லா வாலிபர் சங்க ஆலோசகர் தேரடி பாலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விஹெச்பி நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றதை பலரும் ரசித்தனர். கிருஷ்ணர் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி இல்லை என தெரிவித்ததால் குழந்தைகள் ஆட்டோக்களில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். விழாவில் அடிவாரம் சோழிய வேளாளர் சங்க தலைவர் மதனம், வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, அரிமா சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.