திண்டுக்கல்ல் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில், பழனி குருவப்பா அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்றது.
திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின 4 ஆவது ஆண்டு கபடிப் போட்டிகள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் 24 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில், அனைத்துப் போட்டிகளிலும் பழனி குருவப்பா அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது. பழனி நகரவை மேல்நிலைப் பள்ளி அணி 2 ஆவது இடத்தையும், வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 3ஆவது இடத்தையும் பெற்றன.
செவ்வாய்க்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், ஏபிசி கல்லூரி முதல்வர் க.மணிவண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இயந்திரவியல் துறை தலைவர் ரகுநாத் கலந்து கொண்டு, வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முதல் பரிசு ரூ.7ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3ஆம் பரிசு ரூ.3ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி அணிக்கு ஆறுதல் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









