கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வில்பட்டி ஊராட்சிப் பகுதியான குறிஞ்சிநகர்ப் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த சாலையை 100-நாள் வேலைத் திட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் குறிஞ்சிநகர்ப் பகுதிலுள்ள ஒரு சிலர் சாலை அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களிடம் வட்டார வளர்ச்சி (கி.ஊ) ஆணையர் பட்டுராஜன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குறிஞ்சி நகர்ப் பகுதியில் வியாழக்கிழமை முதல் 100 நாள் வேலை திட்டம் மூலம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...