காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திண்டுக்கல்லில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்திலிருந்து மாவட்டக் குழு செயலர் த.சந்தானம் தலைமையில் கட்சியினர் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இப்போராட்ட அறிவிப்பால், திண்டுக்கல் ரயில் நிலையம் முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே ரயில் மறியலுக்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள் ரயில் நிலையம் முன்புள்ள சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்டச் செயலர் சந்தானம், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.என்.மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுதந்திரதேவி, மணிகண்டன், ரவி உள்ளிட்ட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனி: இதே கோரிக்கையை வலியுறுத்தி தேனி- பெரியகுளம் சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் பெத்தாட்சி ஆஸாத் தலைமை வகித்தார்.அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 48 பேரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









