உஜ்வாலா திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் ஏப்ரல் 20ஆம் தேதி இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என, ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்துப் பேசியதாவது:
ஏப்ரல் 20ஆம் தேதி உஜ்வாலா தினம் அனுசரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 14 கிராம ஊராட்சிகளில் 100 பேருக்கு, பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதில், கோரிக்கடவு, மானூர், எரமநாயக்கன்பட்டி, பச்சலநாயக்கன்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, மோர்பட்டி, பண்ணுவார்பட்டி, அணைபட்டி, வி.எஸ்.கோட்டை, புதுப்பட்டி, பாளையங்கோட்டை, நக்கலூத்து, சிவஞானபுரம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு எரிவாயு விநியோகஸ்தருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறைந்தது 100 பேருக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழு, அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர் மூலம், எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களைக் கண்டறிந்து, இலவச எரிவாயு இணைப்பு பெறுவதற்கான மனுக்கள் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிவாயு இல்லாத குடும்பங்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. வேலு, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

ஓடிடியில் கருப்பு எப்போது?
குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்

ஐபோன் 18 ப்ரோ சிறப்புகள் என்னென்ன? எத்தனை நிறங்களில் கிடைக்கும்?
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


