பழனியை அடுத்த அமரபூண்டியில், தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அமரபூண்டி சாக்ரடீஸ் வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் சாயிசாபானு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் நிறுவனர் சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையில் ராம மோகன ராவ் கூறியிருப்பது தவறாக இருப்பதால் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றப்பட்டது. இதில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியரை உடனடியாக கைது செய்து, சிபிசிஐடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட துணைத் தலைவர் ஓபுராய்மாலி வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... மீண்டும் உயிர்த்தெழ வேண்டும் கோயம்பேடு முனையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
