அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

நத்தம் அருகே குடிநீர் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

நத்தம் அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:13 am IST

நத்தம் அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
        திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள ஆவிச்சிபட்டி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆவிச்சிபட்டி ஊராட்சி சார்பில், கல்லணையாறு, பூலாங்குளம் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, 2 மேல்நிலைத் தொட்டிகள் மூலமாக  குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மோட்டார் பழுதானதாலும், குழாய்கள் சீரமைக்கப்படாததாலும், கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
     இது தொடர்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, கடந்த 1 வார காலமாக குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த ஆவிச்சிப்பட்டி கிராமத்தினர், காலி குடங்களை சாலைகளில் வைத்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். 
     இது குறித்து தகவலறிந்த நத்தம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் பேசி, குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக காலை 7.30 முதல் 8.30 மணி வரை அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.