ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கணிப் பலகை (புரொஜெக்டர்) பயிற்சி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையம் சார்பில், ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வட்டார வளமைய அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை, வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகேசன், ஜோசப் குழந்தைராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதில், உயர் தொடக்க நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கென கணிதம், அறிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான காணொலிகள் உருவாக்கப்பட்டு, அவற்றை கணிப் பலகை மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஒரு கணிப் பலகை வழங்கப்பட்டுள்ளது. அதில், கணிப் பலகைகளில் ஒருங்கமைக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதற்கு, வட்டார அளவில் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், 83 ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








