குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சின்னக்காம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் புதிதாக ஆழ்குழாய் அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த இடையகோட்டை போலீஸார், ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதிதாக ஆழ்குழாய் அமைத்து விரைவில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக அவர்கள் உறுதியளித்ததின் பேரில் முற்றுகைப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

ஹரியாணா தொழிற்சாலைகளில் நாள்தோறும் 5 நிமிட யோகா இடைவேளை அறிமுகம்!

விசிக மாநாட்டில் நெரிசல்! உரையை சுருக்கமாக முடித்த திருமாவளவன்!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


