மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் கணினி தொழில்நுட்பப் போட்டி

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான கணினித் தகவல் தொழில்நுட்பப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான கணினித் தகவல் தொழில்நுட்பப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
  முதுநிலை கணினித்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். பேரவை துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினார்.  கரூர் அரசு கலைக்கல்லூரி கணினித்துறைத் தலைவர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
 கணினி இல்லாத தொழில்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிற துறைகளை காட்டிலும் கணினி துறையில் பயின்றவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இத்துறையினரே உலக அரங்கில் அதிக வருவாய் ஈட்டுபவர்களாகவும்,  தலைசிறந்தவர்களாகவும் உள்ளனர் என்றார்.
 தொடர்ந்து "அமுதம்' இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவில், பழனி சுப்ரமண்யா கல்லூரி, கரூர் அரசுக் கல்லூரி, நிலக்கோட்டை அரசுக் கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி, விருதுநகர் விஎச்என்ஸ் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி என 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.   மேலும், மென்பொருள் உருவாக்கம், குறும்படம் உருவாக்கம், வினாடி - வினா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குமார், குங்குமராஜ், செண்பகம், ஜானி அர்ச்சனா, சிவகாமசுந்தரி, அருணா உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக கணினி துறைத் தலைவர் ஜெயபாரதி வரவேற்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.