
பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் கணினி தொழில்நுட்பப் போட்டி
பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான கணினித் தகவல் தொழில்நுட்பப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான கணினித் தகவல் தொழில்நுட்பப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
முதுநிலை கணினித்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். பேரவை துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினார். கரூர் அரசு கலைக்கல்லூரி கணினித்துறைத் தலைவர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
கணினி இல்லாத தொழில்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிற துறைகளை காட்டிலும் கணினி துறையில் பயின்றவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இத்துறையினரே உலக அரங்கில் அதிக வருவாய் ஈட்டுபவர்களாகவும், தலைசிறந்தவர்களாகவும் உள்ளனர் என்றார்.
தொடர்ந்து "அமுதம்' இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விழாவில், பழனி சுப்ரமண்யா கல்லூரி, கரூர் அரசுக் கல்லூரி, நிலக்கோட்டை அரசுக் கல்லூரி, தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி, விருதுநகர் விஎச்என்ஸ் கல்லூரி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி என 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும், மென்பொருள் உருவாக்கம், குறும்படம் உருவாக்கம், வினாடி - வினா என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் குமார், குங்குமராஜ், செண்பகம், ஜானி அர்ச்சனா, சிவகாமசுந்தரி, அருணா உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக கணினி துறைத் தலைவர் ஜெயபாரதி வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




