நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குடிநீர் வசதி கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு காலிக் குடங்களுடன் வந்த 2 கிராம மக்கள்

குடிநீர் வசதி கோரி, திண்டுக்கல் அருகிலுள்ள 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன்

Updated On :25 டிசம்பர் 2018, 7:27 am IST

குடிநீர் வசதி கோரி, திண்டுக்கல் அருகிலுள்ள 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்தனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள ம.மு.கோவிலூர் ஊராட்சிக்குள்பட்ட வன்னிப்பட்டி பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக் கோரி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி பெண்கள் கூறியது: வன்னிப்பட்டி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஓராண்டுக்கு முன்பு வரை ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால்,  ஒவ்வொரு வீட்டுக்கும் 3 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதால், அருகிலுள்ள தோட்டங்களில் குடிநீர் எடுக்கச் செல்கிறோம். தற்போது தோட்டத்தின் உரிமையாளர்களும் தண்ணீர் தர மறுக்கின்றனர். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் பெய்த மழையினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் உள்ளது. ஆனால், தண்ணீர் எடுப்பதற்கு மோட்டார் வசதி இல்லை என, ஊராட்சி நிர்வாகம் கூறுகிறது. எனவே, எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதேபோல், திண்டுக்கல் அடுத்துள்ள ஏ.வெள்ளோடு ஊராட்சிக்குள்பட்ட மங்களபுரம் பகுதி மக்கள் குடிநீர் வசதி கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர். 
இது தொடர்பாக அவர்கள் கூறியது: எங்கள் பகுதியில் 200 குடும்பங்கள் உள்ளன. கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் இல்லை. காவிரி கூட்டுக் குடிநீர் மற்றும் கோம்பை அணை குடிநீர் எங்கள் பகுதி வழியாக பிற இடங்களுக்குச் செல்கிறது. ஆனால், அதிலிருந்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க மறுக்கின்றனர். இது தொடர்பாக, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.