என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

யானைகளை விரட்ட பைப் கருவி

பழனி வனத் துறை சார்பில், யானைகளை தொலைவிலிருந்தே சத்தம் எழுப்பி விரட்டும் வகையில் புதிய பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:26 am IST

பழனி வனத் துறை சார்பில், யானைகளை தொலைவிலிருந்தே சத்தம் எழுப்பி விரட்டும் வகையில் புதிய பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்துக்குள்பட்ட பழனி வனச் சரகத்தில், தற்போது யானைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இந்நிலையில், மலையடிவாரத்திலுள்ள கிராமப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளை தடுத்து விரட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, பழனி வனச் சரகத்தில் புதிய முறையில் பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அங்குல விட்டம், 3 அடி உயரமுள்ள இரும்பு பைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இக்ககருவியில், சிறிய அளவிலான வெடியை  வைத்து வானத்தை நோக்கி இயக்கும்போது அதிக சத்தம் எழுகிறது. இந்த சத்தமானது, சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு கேட்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. மேலும், இந்த கருவியின் மேல் 50 அடி நீளமுள்ள நூல் கயிறு சுற்றப்பட்டுள்ளதால், கருவியை இயக்கும் வனப் பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதன்மூலம், பொதுமக்களுக்கும்,  வன விலங்குகளுக்கும் இடையேயான மோதல் தடுத்து நிறுத்தப்படும். தற்போது, பழனி வனச் சரகத்தில் 15 உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.