விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புத்துணர்ச்சியுடன் திரும்பியது: பழனி கோயில் யானை கஸ்தூரி

தேக்கம்பட்டியில் முகாமில் இருந்து  பழனி பெரியநாயகியம்மன் திருக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை திரும்பி வந்தது. 90 கிலோ எடை குறைந்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:49 am

DIN

தேக்கம்பட்டியில் முகாமில் இருந்து  பழனி பெரியநாயகியம்மன் திருக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை திரும்பி வந்தது. 90 கிலோ எடை குறைந்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
      51 வயது நிரம்பிய கோயில் யானை கஸ்தூரி தமிழக அரசின் யானைகள் புத்துணர்வு முகாமிற்காக கடந்த ஜன.3 -ஆம் தேதி மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தது. பிப்.20-ஆம் தேதி முகாம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை 9 மணியளவில்
மீண்டும் பெரியநாயகியம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. கோயிலுக்கு வந்த யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மாலை அணிவிக்கப்பட்டு பூசணிக்காய் சுற்றப்பட்டு கோயிலுக்குள் அழைத்து வரப்பட்டு சர்க்கரை பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியன வழங்கப்பட்டது. 
  பின்னர் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்ததாவது: 
பழனிக்கோயில் யானை கஸ்தூரி முகாமிற்கு செல்லும் போது 4,750 கிலோ இருந்தது. தற்போது முகாம் முடித்து திரும்புகையில் 90 கிலோ குறைந்து 4,660 கிலோ எடையுள்ளது. 
முகாமில் கஸ்தூரி யானை கயிறு இழுக்கும் போட்டியில் முதல்பரிசு பெற்றுள்ளது. 
பாகன்கள் பிரசாந்த், குட்டன் ஆகியோருக்கும் நற்பராமரிப்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 
இயற்கையான சூழலில்நடைப்பயிற்சி, நல்ல பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதால் யானை நல்ல மனநிலையுடன் புத்துணர்ச்சியுடன் உள்ளது என தெரிவித்தார். 
  நிகழ்ச்சியில் துணை ஆணையர் மேனகா, கண்காணிப்பாளர் முருகேசன், கால்நடை உதவி மருத்துவர் முருகன், மணியம் சேகர், நளபாகம் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.