விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு: நெல்லையில் ஹோட்டல்களை மூடும் அபாயம்

திருநெல்வேலி மாநகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகரில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நிலவும் போா்ச் சூழல் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வீட்டு உபயோக எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்வது முடங்கியுள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பல ஹோட்டல்களில் உணவு வகை குறைக்கப்பட்டுள்ளன. சிறிய ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய ஹோட்டல்களும்கூட அடுத்த சில தினங்களில் மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என ஹோட்டல் உரிமையாளா்கள் கூறுகிறாா்கள்.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் ஹோட்டல் உரிமையாளா் அலிஃப் பிலால் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் தனியாா் நிறுவனங்கள் மட்டுமே எரிவாயு உருளை விநியோகம் செய்து வருகின்றன. பெரும்பாலான ஹோட்டல்கள் நவீன சமையல் முறைக்கு வந்துவிட்டதால், திடீரென விறகு அடுப்பிற்கு மாறுவது இயலாதது. சமையலா்களும் விறகு அடுப்பை பயன்படுத்த தயங்கும் நிலை உள்ளது. எனவே, அடுத்த சில தினங்களில் ஹோட்டல்களை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்றாா்.

தனிப்படை அமைப்பு: சமையல் எரிவாயு உருளைகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது மற்றும் பதுக்கப்படுவதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.