கடன் வட்டி கொடுக்காததால் மிரட்டல் : ஒட்டன்சத்திரத்தில் பெண் தற்கொலை
ஒட்டன்சத்திரத்தில் கடன்தொகைக்கு வட்டிக்கேட்டு மிரட்டியதால் செவ்வாய்க்கிழமை பெண் தற்கொலை செய்து கொண்டார்.


ஒட்டன்சத்திரத்தில் கடன்தொகைக்கு வட்டிக்கேட்டு மிரட்டியதால் செவ்வாய்க்கிழமை பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட காந்திநகர் 6-ஆவது வார்டைச் சேர்ந்தவர் பூபதி (40).இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மனைவி விமலாதேவி (31).இவர் குடும்ப தேவைக்காக சின்னையகவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமுத்து (45) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினராம். அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட்டி கொடுக்க முடியவில்லையாம். இதனால் பணம் கொடுத்த வள்ளிமுத்து தொலைபேசி மூலமும், நேரில் வந்தும் வட்டிக்கேட்டு மிரட்டினராம். இந்நிலையில், விமலாதேவி செவ்வாய்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவருடைய கணவர் பூபதி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வட்டிக்கேட்டு மிரட்டிய வள்ளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...