விபத்துகளை தவிர்க்க காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் காவல்துறை சார்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.


திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் காவல்துறை சார்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
நத்தம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நத்தம் காவல் ஆய்வாளர் ராம நாராயணன் பேசியதாவது:
தனியார் பேருந்து உரிமையாளர்கள், அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்களை உடனடியாக வேலையை விட்டு நிறுத்த வேண்டும். அதிகவேகமாக இயக்கப்படும் பேருந்து ஓட்டுநர்கள் மீது புகார் அளிப்பதற்கு, பேருந்தின் உரிமையாளரின் செல்லிடப்பேசி எண் பயணிகளுக்கு தெரியும் வகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டால், பேருந்து உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை மீறி, பயணிகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகளினால் ஏற்பட்ட விபத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான முயற்சிகளை பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி, அனைத்து வகையான வாகன ஓட்டுநர்களும்மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது சார்பு ஆய்வாளர்கள் வேல்முருகன், சேக்அப்துல்லா உள்ளிட்ட நத்தம் காவல் துறையினர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...