/

சிறப்புக் காவல் படை முகாமுக்குள் புகுந்த நல்ல பாம்பு

பழனி சிறப்புக் காவல்படை முகாமுக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த நல்ல பாம்பை, தீயணைப்புப் படை வீரர்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:35 am

பழனி சிறப்புக் காவல்படை முகாமுக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த நல்ல பாம்பை, தீயணைப்புப் படை வீரர்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
     பழனி-புதுதாராபுரம் சாலையில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 14 ஆம் அணி செயல்பட்டு வருகிறது.  இங்கு, காவலர் குடியிருப்பு, அலுவலகம், உணவகம் ஆகியன உள்ளன.   இங்கு, சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்தது.  உடனே, காவலர்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் அந்த பாம்பை உயிருடன் பிடித்து, வனத் துறை வசம் ஒப்படைத்தனர். அவர்கள், பாம்பை தேக்கன்தோட்டம் வனப் பகுதியில் விட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.