கொடைக்கானலில் நவீன இறைச்சிக் கூடம் அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.
கொடைக்கானல் பகுதிகளான பி.டி.சாலையில் வாரச் சந்தை, நகராட்சி பணியாளர்களுக்கான குடியிருப்பு பகுதிகள் அமைய உள்ள இடம் மற்றும் நவீன இறைச்சிக் கூடம் அமைய உள்ள இடம் ஆகியவற்றை திங்கள்கிழமை அவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அண்ணாநகர்ப் பகுதியில் ஆய்வு நடத்தியபோது அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தங்கள் பகுதியில் கழிப்பறை வசதி இல்லையென்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், பொது இடங்களையே கழிப்பறையாக பயன்படுத்தி வருவதாகவும், குப்பைகள் பல நாள்களாக அகற்றப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜானகி ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொடைக்கானல் பகுதிகளில் நகராட்சி பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நவீன இறைச்சிக் கூடம் அமைப்பதற்கு இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் கோடை காலங்களில் கொடைக்கானலில்
குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு அப்சர்வேட்டரி பகுதியில் ரூ.10 கோடி செலவில் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. அண்ணாநகர்ப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு உதவி செய்யப்படும் .
கொடைக்கானல் நகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. பணிகள் முடிந்த பிறகு அதன் பின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலைகள் சரி செய்யப்படும். கொடைக்கானலில் 12-ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடிய குறிஞ்சி மலர் பூத்து வருகிறது. இதற்காக கோடை குறிஞ்சி திருவிழா நடத்துவதற்கு சுற்றுலாத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





