/

உலக சுற்றுச்சூழல் தினம்: கொடைக்கானலில் மரக்கன்றுகள் நடுதல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  கொடைக்கானல் நகராட்சி சார்பில் பிரகாசபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜூன் 2018, 5:38 am IST

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  கொடைக்கானல் நகராட்சி சார்பில் பிரகாசபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன், பட்டர் புரூட் மற்றும் சோலை மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மேலும் நகராட்சி பணியாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கத்துடன் அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் ராம்குமார், சமூக ஆர்வலர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பாண்டிச் செல்வம்,தங்கபாண்டி,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆஷாரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் கூறியது:
கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நகர்ப் பகுதிகளிலுள்ள அனைத்துக் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பேப்பர் பை, துணிப்பை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகளை வைத்து மலைச் சாலைகளில் வரும் போது வனப் பகுதிகளிலும், சாலை ஒரங்களிலும் வீசிச்செல்கின்றனர். அவற்றை கொடைக்கானல் வரும் அனைத்துப் பயணிகளும் தவிர்க்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பது நாம் அனைவரின் கடமையாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.