9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பழனி மலைக் கோயில் உண்டியல் திறப்பு: முதல் நாள் எண்ணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் விடுமுறை நாளை முன்னிட்டு வந்த பக்தர்கள் கூட்டத்தால் 28 நாள்களில் நிரம்பியதையடுத்து,

Updated On :7 ஜூன் 2018, 5:42 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் விடுமுறை நாளை முன்னிட்டு வந்த பக்தர்கள் கூட்டத்தால் 28 நாள்களில் நிரம்பியதையடுத்து, அவை புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இதில் முதல்நாள் எண்ணிக்கையில் காணிக்கை வரவு ரூ. 2 கோடியை தாண்டியது. வியாழக்கிழமையும் உண்டியல் எண்ணிக்கை நடைபெறுகிறது.
 இதில் முதல் நாள் எண்ணிக்கையில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.2 கோடியே 4 லட்சத்து 55 ஆயிரத்து 355 கிடைத்தது. மேலும் உண்டியலில் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 975 கிராமும், வெள்ளி 12, 740 கிராமும் இருந்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 349-ம் கிடைத்தன. அமெரிக்க டாலர் மட்டுமே இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்துக்கு இருந்தது. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த காணிக்கை எண்ணும் பணியில் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி வியாழக்கிழமையும் தொடர்கிறது. இந்நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், மதுரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், கண்காணிப்பாளர் முத்துராஜா, முரளி, மேலாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.