ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை ஞாயிற்றுக்கிழமை உயர்ந்து காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினசரி முருங்கை, தக்காளி, வெண்டைக்காய், சுரைக்காய், சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.கடந்த சில தினங்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் முருங்கையில் குத்தல் நோய் தாக்கியது. இதனால் முருங்கைக்காய் வரத்து குறைந்து விட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.14-க்கு விற்ற கரும்பு முருங்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.25-க்கும், ரூ.15-க்கு விற்ற செடி முருங்கை ரூ.20-க்கும், ரூ.10-க்கு விற்ற மர முருங்கை ரூ.11-க்கும் விற்பனையானது.
மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்: சின்னவெங்காயம் கிலோ ரூ.12 முதல் 25 வரை விற்றது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.50 முதல் 60 வரை, டிஸ்கோ கத்திரிக்காய் ரூ.150, வெண்டைக்காய் ரூ.14, சுரைக்காய் ரூ.4, பீட்ரூட் ரூ.4, பாகற்காய் ரூ.13, பீன்ஸ் ரூ.12,ரிங் பீன்ஸ் ரூ.20, முருங்கை பீன்ஸ் ரூ.35, புஸ் பீன்ஸ் ரூ.27, ஒட்டு அவரை ரூ.32, பெல்ட் அவரை ரூ.35, பெல்லி அவரை ரூ.30, கறிக்கோழி அவரை ரூ.52, நார்த்தை ரூ.25, உருண்டை மிளகாய் ரூ.17க்கு விற்பனையாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்!

தங்கம் விலை இன்றும் (மே 14) உயர்வு! எவ்வளவு?

சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
