திண்டுக்கல் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை 10 நாள்களாகியும் சீரமைக்காததால் இதுவரை பல லட்சம் லிட்டர் குடிநீர், கழிவுநீருடன் கலந்து வீணாகி வருகிறது.
திண்டுக்கல் நகரில் தீராத பிரச்னையாக இருப்பது குடிநீர். பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் கிடைக்காமல், கடந்த சில நாள்களாக தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே ஆத்தூர் காமராஜர்அணையிலிருந்து, திண்டுக்கல் நகருக்கு புதிய குழாய் பதிக்கும் ஜிக்கா திட்டம் ரூ.70 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது.
புதிய குழாய் பதிக்கப்பட்ட பின் அனைத்து பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும் என மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், புதிய குழாய் பதிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், சில பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என முறையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காந்திமார்க்கெட் சாலை மற்றும் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி சந்திப்பில், கடந்த 10 நாள்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அந்த உடைப்பினை சரி செய்யப்படவில்லை. இதனால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர், கழிவுநீர் கால்வாயில் வீணாகிக் கொண்டிருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர் கூறியது: ஜிக்கா திட்டத்திற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதனால், தண்ணீரை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடைப்பினை சரி செய்வதற்கு தேவையான உபகரணங்கள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனாலும், அதனை சீரமைக்க வேண்டிய பணியினை ஜிக்கா திட்ட பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனி நபராக ஆட்டத்தை மாற்றக்கூடியவர் டேவிட் மில்லர்; முன்னாள் வீரர் பாராட்டு!

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை அவகாசம்!

TVK-வுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் அணியை சந்தித்த முதல்வர் Vijay! |

நீட் மறுதேர்வு எப்போது? - என்டிஏ இயக்குநர்
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
