திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்குவதை அரசு தவிர்க்க வலியுறுத்தி தீர்மானம்

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கி ஊக்குவிக்கும் திட்டத்தை

Updated On :8 அக்டோபர் 2018, 7:43 am IST

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கி ஊக்குவிக்கும் திட்டத்தை கைவிட்டு, அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.ஆனந்த கணேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் பீ.பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7ஆவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளை களைந்து, 21 மாத ஊதிய நிலுவைத் தொகையினை தமிழக அரசு வழங்க வேண்டும்.
 கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில், தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கி ஊக்குவிக்கும் திட்டத்தை கைவிட்டு, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிலை உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே இருந்த 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.