தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

கொடைரோடு அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி 17 பேர் காயம்

கொடைரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து  மோதிய விபத்தில், ஓட்டுநர், நடத்துநர் உள்பட 17 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.

Published On :

கொடைரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து  மோதிய விபத்தில், ஓட்டுநர், நடத்துநர் உள்பட 17 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்து, வியாழக்கிழமை அதிகாலை திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது.  கொடைரோட்டை அடுத்துள்ள சுங்கச் சாவடி அருகே சென்ற போது, சாலையோரமாக நிறுத்தியிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் சுரேந்திரன் (48), நடத்துநர் சுப்புராஜ் (39), பயணிகள்  முத்துப்பாண்டி(33), மாத்தினி(47), கவிதா(33), சௌந்தர்யா(19) உள்பட 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.