தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பழனி மலைக்கோயிலில் நாள் முழுக்க அன்னதானம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்

பழனி மலைக்கோயிலில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் இதுவரை ஒரு கோடியே 8 லட்சம் பேர் உணவருந்தியுள்ளனர்.

Published On :

பழனி மலைக்கோயிலில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் இதுவரை ஒரு கோடியே 8 லட்சம் பேர் உணவருந்தியுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 13.09.2012 அன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்  அரங்கநாதர் சுவாமி கோயிலிலும் நாள்முழுக்க அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் நடைபெறும். மேலும், இந்த அன்னதானத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ.100  முதல் நன்கொடை வழங்கலாம்.  தவிர நிரந்தர கட்டளையாக ரூ.27,500 செலுத்தினால் வருடத்தில் ஒருநாள் அவர்கள் விரும்பும் தினத்தில் அவர்கள் பெயரில் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
  இந்த அன்னதானத் திட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.10 லட்சம் வரை நன்கொடை தரப்படுகிறது. உணவுக்கு பயன்படுத்தப்படும் காய்களை இருப்பு வைக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை உள்ளது.  மேலும், மலைக்கோயிலில் மளிகைப் பொருள்கள் வைக்க அறையும் உள்ளது. 
அன்னதானக் கூடத்தில் ஒரு அமர்வுக்கு சுமார் 300 பேர் வரை சாப்பிட இடவசதி உள்ளது. சாதாரண நாள்களில் 4 ஆயிரம் பக்தர்களும், திருவிழா நாள்களில் 7 ஆயிரம் பக்தர்களும் அன்னதானத்தில் பங்கேற்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை சுமார் ஒரு கோடியே 8 லட்சம் பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்று உணவு அருந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.