ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.15 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள தும்மிச்சம்பட்டி சாலை, பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலை, வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, கே.கே.நகர் சாலை, அண்ணா நகர் சாலை உள்ளிட்ட சாலைகள் பழுதடைந்து குண்டு, குழியுமாக உள்ளன.
இச்சாலைகளை சீரமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2018-19-ஆம் ஆண்டு நிதியில் இருந்து ரூ.15 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








