ஒட்டன்சத்திரம் வேளாண்மை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பருத்தி விற்பனை தொடங்கியுள்ளது.
ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே வேளாண்மை விற்பனைக்கூட வளாகம் உள்ளது. இங்கு இப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். அப்பொருள்களை வாங்குவதற்கு கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அதில் பருத்தி உயர்தரத்தில் இருந்ததால் மாவட்ட வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடம் மூலம் முதன்முறையாக ஏலம் விடப்பட்டது. அதில் பருத்தி தரத்துக்கு ஏற்ப வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஒரு கிலோ பருத்தி ரூ.45 முதல் ரூ. 55 வரை விற்பனையானது. ஏல நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம், கண்காணிப்பாளர்கள் ராமன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹபீபி டிரைலர்!
கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு! விழா மேடையில் பினராயி விஜயன்!

நடிகை ஸ்ரீலீலா - திலக் வர்மா காதலா?

குடும்ப ரசிகர்களைக் கவரும் புதிய இணையத் தொடர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
