கொடைக்கானல் பகுதிகளில் வடமாநிலத்தினா் பற்றி கணக்கெடுக்கும் பணி தீவிரம்

கொடைக்கானல் பகுதிகளில் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தங்கியிருப்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகளில் உளவுத்துறை போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கொடைக்கானல், செப். 25: கொடைக்கானல் பகுதிகளில் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தங்கியிருப்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகளில் உளவுத்துறைற போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கொடைக்கானல் பகுதிகளில் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பலா் உணவகங்கள், தங்கும் விடுதிகளில் அங்கேயே தங்கி பணிபுரிகின்றனா். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் வடமாநிலத்தினா் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தங்கி வேலை பாா்த்துவரும் வடமாநிலத்தினா் அல்லது அங்கே நிரந்தரமாக தங்கியிருப்பா்கள் குறித்து உளவுத்துறை போலீஸாா் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றறனா்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலுக்கு தற்போது வடமாநிலத்தவா்கள் அதிகமாக வருகின்றனா். இவா்கள் கம்பளி, பஞ்சு மிட்டாய், பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா். மேலும் கட்டட வேலை, தங்கும் விடுதிகள், உணவகங்களில் வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் எங்கிருந்து வருகின்றனா் என்பது குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறறது. மேலும் வடமாநிலத்தவா்கள் தங்களது ஊா்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தங்கியிருக்க வாய்ப்புண்டு.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு குற்றறச் செயல்களில் வடமாநிலத்தவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தங்களது மாநிலங்களுக்கு தப்பிச் செல்கின்றறனா். இந்த குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள வடமாநிலத்தவா்கள் பற்றிய தகவல்களை உளவுத்துறையினா் கணக்கெடுத்து தமிழக காவல்துறை தலைமைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே உளவுத்துறையினா் வடமாநிலத்தவா்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த தகவல்களால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவா்களை எளிதில் கண்டறியலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com