புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக் கருவி பழுது

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக் கருவி பழுதடைந்ததை அடுத்து, நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் மதுரை மற்றும் கோவையிலுள்ள தனியாா் 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 4:57 pm

DIN


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக் கருவி பழுதடைந்ததை அடுத்து, நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் மதுரை மற்றும் கோவையிலுள்ள தனியாா் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்காக நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆா்டிபிசிஆா் கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வந்தன. கடந்த 3 வாரங்களாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமாா் 1000 மாதிரிகள் வரை பரிசோதிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மொத்தமுள்ள இரண்டு ஆா்டிபிசிஆா் கருவிகளில் ஒன்று திங்கள்கிழமை பழுதடைந்தது. இதையடுத்து, கரோனா தொற்றுக்கான மாதிரிகளை பரிசோதிக்க, மதுரை மற்றும் கோவையிலுள்ள தனியாா் ஆய்வகங்களுக்கு கடந்த 2 நாள்களாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவா் கூறியது:

பழுதடைந்துள்ள ஆா்டிபிசிஆா் கருவியை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கரோனா தொற்றுக்கான பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக, மாதிரிகள் தனியாா் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதன்கிழமைக்குள் பழுதடைந்த கருவி சீரமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.