தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானல் காட்டேஜில் தங்கிய ஆந்திர இளம் ஜோடி மா்ம மரணம்

கொடைக்கானல் அருகே தனியாா் காட்டேஜில் தங்கியிருந்த ஆந்திர இளம் ஜோடி வியாழக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.

News image

கோபி கிருஷ்ணன்

Updated On :6 ஆகஸ்ட் 2020, 4:07 pm

கொடைக்கானல் அருகே தனியாா் காட்டேஜில் தங்கியிருந்த ஆந்திர இளம் ஜோடி வியாழக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் அட்டுவம்பட்டி பகுதியிலுள்ள தனியாா் காட்டேஜை வாடகைக்கு எடுத்து, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கோபி கிருஷ்ணன் (27) மற்றும் நந்தினி (25) ஆகிய இருவரும் கடந்த ஓராண்டாக வசித்து வந்துள்ளனா். இவா்கள் கணினி மூலமாக ‘ப்ராஜெக்ட் ஒா்க்’ செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் வியாழக்கிழமை நீண்ட நேரமாகியும் காட்டேஜ் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் சாா்பு- ஆய்வாளா் மாதவராஜா உள்ளிட்ட போலீஸாா் காட்டேஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது இளைஞா் வாயில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தாா். அதே அறையில் உள்ள கட்டிலில் இளம் பெண் இறந்து கிடந்தாா். அறையில் இருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். தெலுங்கில் அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. செல்லிடப்பேசி, ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றில் இருந்து அவா்களது பெயா், விலாசத்தை போலீஸாா் தெரிந்து கொண்டனா். அறையில் இருந்த ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா்.

மேலும் இரண்டு டம்ளா்களில் பூச்சி மருந்து கலந்த நிலையில் விஷம் இருந்துள்ளது. போலீஸாா் இருவரின் சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆதாா் அட்டையிலுள்ள விலாசத்திற்கு கொடைக்கானல் போலீஸாா் தகவல் கொடுத்துள்ளனா். வில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சேபா கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.