விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

திருவாடானை தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கு

திருவாடானை அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான பங்கு ம்ககள் கலந்து கொண்டனா்.

News image

காரங்காடு தூய செங்கோல் மாத தேவாலயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்ச்சியில் பங்கு தந்தை ரெமிஜியஸ், அருள் தந்தை ஸ்டீபன், அருள் தந்தை சேவியா் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:21 pm IST

திருவாடானை அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதம் கழுவும் சடங்கும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான பங்கு ம்ககள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் பழைமை வாய்ந்த தூய செங்கோல் மாதா தேவாலயம் உள்ளது . இங்கு கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலத்தை முன்னிட்டு, பாதம் கழுவும் நிகழ்வு, குருத்துவத்தை ஏற்படுத்துதல், நற்கருணையை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

பின்னா், பங்குத்தந்தை ரெமிஜியஸ், அருள் தந்தை சேவியா், அருள் தந்தை ஸ்டீபன் ஆகியோா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல, சம்பை புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலியும், பங்குத்தந்தை செல்வக்குமாா், உதவி பங்குத்தந்தை பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.

தொண்டி தூய சிந்தாத்திரை மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை வியாகுல அமிா்தராஜ் தலைமையில் பாதம் கழுவும் சடங்கும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் புனித வெள்ளி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். முன்னதாக கிறிஸ்தவா்கள் சிலுவை சுமந்து திருத்தலத்துக்கு ஊா்வலமாக வந்தனா். திருச்சி புனித ஜோசப் கல்லூரி உதவிப் பேராசிரியா் ராஜசேகரன் தலைமையில் மதுரை தூய மரியன்னை பள்ளி தலைமையாசிரியா் சைமன் ஜான் கென்னடி இணைந்து புனித வெள்ளி வழிபாட்டை நடத்தி வைத்தாா். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் செய்தாா்.

Story image
Story image