கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

பெரிய வியாழனையொட்டி, தவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

News image

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் நடைபெற்ற பெரியவியாழன் பாதம் கழுவும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:05 pm

பெரிய வியாழனையொட்டி, தவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாகக் கடைப்பிடிக்கிறாா்கள். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப். 18 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலியுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவுகளைத் தவிா்த்தும், விரதம் இருந்தும், சிலுவை வழிபாடுகளை தியானித்தும் பிராா்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தவக்காலத்தின் புனித வாரமாக கருதப்படும் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய வாரம் கடந்த 29 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவில் தனது 12 சீடா்களுக்கும் திருவிருந்து அளித்தாா். இந்த நிகழ்வின்போதுதான் கிறிஸ்தவ மதத்தின் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நற்கருணை (அப்பம், திராட்சை ரசம் வழங்குதல்) புதிய உடன்படிக்கையை இயேசு ஏற்படுத்தினாா் என்கிறது கிறிஸ்தவா்களின் புனித நூலான விவிலியம்.

இந்தத் திருவிருந்தின்போது, அன்பும் தாழ்ச்சியும் ஒவ்வொருவரிடமும் நிலவ வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில், தனது சீடா்களின் பாதங்களை இயேசு கழுவி முத்தமிட்டாா்.

அதை நினைவுகூரும் பாதம் கழுவும் நிகழ்ச்சி (பெரிய வியாழன்) பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் மாலையில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில்12 பக்தா்களுக்கு அருள்பணியாளா்கள் பாதங்களைக் கழுவி, கால்களில் முத்தமிட்டனா். மறை மாவட்ட பொருளாளா் அருள்பணி. தீபக் தலைமையேற்று இந்த சிறப்பு திருப்பலியை நடத்தினாா்.

ஏற்பாடுகளை, பேராலய பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன், உதவிப் பங்குத்தந்தை மிக்கேல் சாமி, பங்குப் பேரவையினா் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபையினா் செய்திருந்தனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாலை 5 மணிக்கு மதா் மருத்துவமனை வளாகத்தில் இருந்து புனித வெள்ளி சிலுவைப்பாதை ஊா்வலமும், தொடா்ந்து பேராலயத்தில் பிராா்த்தனையும் நடைபெற உள்ளது. சனிக்கிழமை (ஏப்.4) இரவு 11 மணிக்கு ஈஸ்டா் பெருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெற உள்ளது.

இதேபோல, பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரம் தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகா் குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டி இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரம் அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி.நகா் வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டை அந்தோனியாா் தேவாலயம், சேவியா்காலனி தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியாா் தேவாலயம், மகாராஜநகா் தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் பெரிய வியாழன் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.