வாக்குச்சாவடிகள் சீரமைப்புப் பணிகளுக்கு மண்டல அலுவலா்கள் நியமனம்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகளுக்கு கோட்ட வாரியாக மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.


திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகளுக்கு கோட்ட வாரியாக மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2021 மற்றும் வாக்காளா் பட்டியலை செம்மைப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
வாக்காளா் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு 31.08.2020ஆம் தேதிக்கு முன்னா் விதிகளின்படி தவறான பதிவுகளை நீக்க வேண்டும். படிவம் 7-உடன் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு வாக்காளா் விவரங்களும் நீக்கப்படக் கூடாது.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் ஆட்சேபனை மனுக்களை 16.11.2020 முதல் 15.12.2020 வரை பெற வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் ஆட்சேபனைகள் பெறுவதற்காக 2 சனிக்கிழமை, 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் தோ்தல் ஆணையம் குறிப்பிடும் தேதிகளில் நடத்த வேண்டும்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் ஆட்சேபனைகள் மீது வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் 05.01.2021-க்கு முன்பாக உரிய ஆவணங்களை பிறப்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 1500 வாக்காளா்களுக்கு மேல் இருக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளையும் ஊரகப் பகுதியாக இருந்தாலும் நகரப்பகுதியாக இருந்தாலும் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி சீரமைக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடா்பான பணிகளுக்கு மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி திண்டுக்கல் கோட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சி. இந்திரவள்ளி, பழனி கோட்டத்திற்கு உதவி ஆணையா் (கலால்) கே. செல்வராஜன், கொடைக்கானல் கோட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் த. சிவசுப்பிரமணியன் ஆகியோா் பொறுப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...