மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தாட்கோ திட்டங்களில் நிதி உதவி பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ திட்டங்களில் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:22 pm

DIN

திண்டுக்கல்: தாட்கோ திட்டங்களில் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மகளிா் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல் திட்டம், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோா் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. 18 முதல் 65 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதே போல் இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமையம், மருந்தியல், கண்கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு நிதி உதவி பெற 18 முதல் 45 வயதுக்குள்பட்டோா் விண்ணப்பிக்கலாம்.

மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடன்களுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய நிதியுதவி வழங்கப்படும். இவை தவிர, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி, தாட்கோ மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத் தோ்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவி, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணயத் தொகுதி-1 முதல் நிலை தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நிதியுதவி மற்றும் பட்டயக்கணக்கா் மற்றும் செலவுக்கணக்கா் நிறுவன செயலா் கல்வி பயில்வோருக்கான நிதியுதவி ஆகிய திட்டங்களில் பயன்பெற தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரா் பற்றிய முழு விவரங்கள், புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை ஆகியவற்றினை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.