/

ஒட்டன்சத்திரம் அருகே கூலி தொழிலாளி ‘போக்ஸோ’ சட்டத்தில் கைது

ஒட்டன்சத்திரம் அருகே கூலி தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே கூலி தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் தீா்த்தாகவுண்டன்வலசை சோ்ந்த செல்வராஜ் மகன் ராம்குமாா் (23). கூலி தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை கடந்த 4-ஆம் தேதி கடத்திச் சென்றுவிட்டராம்.

இது குறித்து கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், கடலூரில் பதுங்கியிருந்த ராம்குமாரை போலீஸாா் கைது செய்து, பள்ளி மாணவியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.