கொடைக்கானல் மூஞ்சிக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட மேகமூட்டம்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட மேகமூட்டம்.

கொடைக்கானலில் மேகமூட்டம்: சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை சாரல் மழையுடன் மேகமூட்டம் நிலவியதால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
Published on

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை சாரல் மழையுடன் மேகமூட்டம் நிலவியதால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கொடைக்கானலில் கடந்த 5 நாள்களாக சாரல் மழையுடன் அதிகமான மேகமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் வழக்கத்தை விட குளிா் அதிகரித்து வருகிறது. பெருமாள்மலை, செண்பகனூா், வட்டக்கானல், அட்டக்கடி, நாயுடுபுரம், அப்சா்வேட்டரி போன்ற இடங்களில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாத் தலங்களும் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடியிருந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்துக் காணப்படும் மூஞ்சிக்கல், அண்ணாசாலை, செவன்ரோடு, கலையரங்கம் ஆகியப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடும் மேகமூட்டம் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com