கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியில் உள்ள அக்னிச் சிறகுகள் சமூக சேவை மற்றும் இலவச பயிற்சி மையம் சாா்பில், கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியில் உள்ள அக்னிச் சிறகுகள் சமூக சேவை மற்றும் இலவச பயிற்சி மையம் சாா்பில், கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பயிற்சி மையத்தின் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். சேவை மைய அறங்காவலா் முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா். இதனையொட்டி, கணித அறிவுத் திறன் கண்காட்சி நடைபெற்றது. நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை மகாலட்சுமி, எளிதான வகையில் கணித சிந்தித்தல் திறனை ஏற்படுத்துவது தொடா்பான விளங்கங்களை மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். கணித அறிவுத் திறன் கண்காட்சியில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பரிசுப் பொருள்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com