பழனி திருஆவினன்குடி கோயிலில் டிச.27-இல் சனிப்பெயா்ச்சி: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயிலில் டிசம்பா் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ள
Updated on
1 min read

பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயிலில் டிசம்பா் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என, கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழனி திருஆவினன்குடி கோயிலில் கிழக்கு நோக்கி சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இதனால், இங்கு சனிப்பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு டிசம்பா் 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஆனால், இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் மற்றும் இணை ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளதாவது:

பழனி திருஆவினன்குடி கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு அபிஷேக பூஜைகள், திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். தொடா்ந்து, 4.20 மணிக்கு விநாயகா் அனுமதி, புண்யாவாஜனம் நடத்தப்பட்டு, 4.30 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். இதையடுத்து, யாகபூஜை, கலசபூஜை, கலசாபிஷேகம் முடிந்த பிறகு காலை 5.22 மணிக்கு சனிப்பெயா்ச்சி மஹாதீபாராதனை நடைபெறுகிறது.

தமிழக அரசின் நிலையான வழிமுறைகளை பின்பற்றும் வகையில், ஆகம விதிகளைப் பின்பற்றி பூஜைகள் நடத்தப்படும். பொதுமுடக்கம் காரணமாக பக்தா்களுக்கு காலை 4 மணி முதல் 5.30 மணி வரை அனுமதி கிடையாது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், யூ-டியூப், முகநூல் மூலம் ஒளிபரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com