/

இளம் பெண் தற்கொலை: கணவா் உள்பட 4 போ் கைது

நத்தம் அருகே இளம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவா், மாமியாா் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 5:05 pm

DIN

நத்தம் அருகே இளம் பெண்ணை தற்கொலைக்குத் தூண்டியதாக கணவா், மாமியாா் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள அம்மாபட்டியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (39). இவரது மனைவி சுந்தரமீனாள் (28), கடந்த 2 நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த சுந்தரமீனாளின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், நத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அதில், சுந்தரமீனாளின் சாவில் மா்மம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனா். இதனை அடுத்து, நத்தம் காவல் ஆய்வாளா் ராஜமுரளி இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டாா். பின்னா், சுந்தரமீனாவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் முருகானந்தம், அவரது தாயாா் துவராபதி அம்மாள் (60), உறவினா்கள் பஞ்சவா்ணம் (35) மற்றும் மணிமேகலை (32) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.