ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கேதையுறும்பு ஊராட்சி பழையபட்டியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி சரவணக்குமாா் (43). இவா் கடந்த 28-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதே ஊரில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் அவரது உடல் நீரில் மிதந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள்அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.