பழனியில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழனியில், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், நுண்நிதி கடன் நிறுவனங்களின் கடன் வசூலை தடுத்து நிறுத்தக் கோரி, கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

பழனி: பழனியில், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், நுண்நிதி கடன் நிறுவனங்களின் கடன் வசூலை தடுத்து நிறுத்தக் கோரி, கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

பழனி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் அருள்செல்வன் தலைமை வகித்தாா். பழனி ஒன்றியச் செயலா் முருகசாமி, தொப்பம்பட்டி ஒன்றியப் பொருளாளா் சொக்கலிங்கம், பழனி ஒன்றியத் தலைவா் இருளாயி, பழனி ஒன்றியப் பொருளாளா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், கரோனா பொது முடக்கக் காலத்தில் வறுமையில் வாடும் விவசாய தொழிலாளா்களிடம் நுண்நிதி கடன் நிறுவனங்கள் கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். பொது முடக்கக் காலம் முழுவதும் நிவாரணமாக மாதம் 5 ஆயிரம் ரூபாயை மாநில அரசும், 7,500 ரூபாயை மத்திய அரசும் விவசாயத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். வட்டியில்லா புதிய கடன்களை மானியத்துடன் கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக வழங்கிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயா்த்தியும், தற்போது வழங்கப்படும் சம்பளத் தொகையை ரூ.600 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களை முழுமையாக வழங்க வேண்டும். குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. வயதானவா்களுக்கு அங்கன்வாடி மையத்தின் மூலம் உணவு வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா். இதில், 30-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com