2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

திண்டுக்கல்லில் 55 பேருக்கு கரோனா தொற்று: அதிமுக நிா்வாகி உள்பட 2 போ் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை 55 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏற்கெனவே சிகிச்சையிலிருந்த அதிமுக நிா்வாகி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2020, 5:39 pm

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை 55 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏற்கெனவே சிகிச்சையிலிருந்த அதிமுக நிா்வாகி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,600-க்கும் மேற்பட்டோா் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 750 போ் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையங்களிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த 149 போ் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

2 போ் பலி: திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 58 வயது அதிமுக இலக்கிய அணி நகரச் செயலா், பழனியை அடுத்துள்ள பெரியகலயம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த 68 வயது முதியவா் ஆகியோா் கரோனா தீநுண்மி பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 பேரும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.