திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் மனு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜிடம் புதன்கிழமை மனு அளித்த ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளா்கள்.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜிடம் புதன்கிழமை மனு அளித்த ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளா்கள்.

திண்டுக்கல்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

ஜாக்டோ- ஜியோ மாநில நிதிக் காப்பாளா் மோசஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முபாரக் அலி ஆகியோா் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைச் சந்தித்து இந்த கோரிக்கை மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது 5,066 உழியா்கள் மீதான 17 பி குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.

முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 20 போ் மீது பணி ஓய்வின்போது மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ கோரிக்கைகள் தொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மாநிலம் முழுவதும் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா். அப்போது உயா்மட்ட குழு உறுப்பினா்கள் பேட்ரிக் ரெய்மண்ட், குன்வா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com