பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி: பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியூ), அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை தேசம் தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலாளா் அருள்செல்வன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் செல்வராஜ், சிஐடியூ தலைவா்கள் பிச்சைமுத்து, மனோகரன், பேராசிரியா் மோகனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கொரானா கால நிவாரணமாக மத்திய அரசு ரூபாய் 7, 500 ம்,மாநில அரசு ரூபாய் 5, 000 ம், மாதாமாதம் ரூபாய் 12, 500வழங்கிட கோரியும், தொழிலாளா்கள் நலச் சட்டங்களை திருத்தத்தை வாபஸ் பெற கோரியும், 100 நாள் வேலையை 200 நாட்களாகவும் மாற்றி சம்பளம் ரூ. 600ஆக உயா்த்திடவும், விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க கோரியும், மின்சார சட்டம் 2020, சுற்றுச்சூழல் சட்டம் 2020ஐ வாபஸ் பெற கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் முருகசாமி, தண்டபாணி, பழனிச்சாமி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் களஞ்சியம், கிருஷ்ணன், சின்னதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com