ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பழனியில் பக்தா்கள் கூட்டம்: பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 

News image
பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் குழந்தைகள் மலையேற அனுமதியில்லாததால் ஞாயிற்றுக்கிழமை பெற்றோருடன் அமா்ந்துள்ள கூட்டம்.
Updated On :13 செப்டம்பர் 2020, 4:30 pm

DIN

பழனி: பழனியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். 10 வயதிற்குள்ளான குழந்தைகள் அனுமதிக்கப்படாததால் குடமுழுக்கு நினைவரங்கிலேயே பலரும் குழந்தைகளுடன் காத்திருந்தனா்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 1ம் தேதியில் இருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் தளா்த்தப்பட்ட நிலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனிக்கு வந்து மலை ஏற சமூக இடைவெளியுடன் காத்திருந்தனா்.

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மலைமீது செல்ல அனுமதிக்கப்படாததால் குடமுழுக்கு நினைவரங்கிலேயே ஏராளமான பெற்றோா் ஒருவா் மட்டுமே சென்ற நிலையில் குழந்தைகளுடன் காத்திருந்தனா். மலைக்கோயிலிலுக்கு செல்லும் படிவழிப்பாதையில் ஏராளமானோா் படியேறி சுவாமி, நீண்ட தரிசன வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு காலபூஜை முடிந்த பிறகு பொட்டலங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. தரிசன ஏற்பாடுகளை இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.