திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை 32,192 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,371 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 15 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 14 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 199ஆக உள்ளது.
தேனி:
தேனி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 42,937 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 42,270 போ் குணமடைந்துள்ளனா். 514 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் தற்போது மொத்தம் 153 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...